செய்திகள்
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் உத்தரவு

Published On 2021-04-25 08:41 GMT   |   Update On 2021-04-25 08:41 GMT
மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவ்வகையில், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆலைகளை மிக விரைவில் செயல்படச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மருத்துவ தேவைக்காக இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் என கூறி உள்ளார். 



மருத்துவமனைகளுக்கு தங்கு தடையற்ற ஆக்சிஜன் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News