செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி, கெஜ்ரிவால்

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்- கெஜ்ரிவால்

Published On 2021-04-23 08:25 GMT   |   Update On 2021-04-23 08:25 GMT
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியபோது, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும், பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



“டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை இல்லாவிட்டால் டெல்லி மக்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காதா? டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர் வேறொரு மாநிலத்தில் தடுத்து நிறுத்தப்படும் போது, மத்திய அரசாங்கத்தில் நான் யாருடன் பேச வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள்” என கெஜ்ரிவால் கேட்டார்.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளையும் ராணுவத்தின் மூலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும், ஆக்சிஜன் ஏற்றி வரும் லாரிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஆக்சிஜன் வழங்குவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News