செய்திகள்
மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி

Published On 2020-10-05 01:42 GMT   |   Update On 2020-10-05 01:42 GMT
மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன் என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.
பெலகாவி :

நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். மந்திரிசபையில் இருந்து சிலரை நீக்குவதாகவும் சொல்கிறார்கள். எடியூரப்பா யாரை நீக்கினாலும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

கட்சியில் எழுந்துள்ள சில கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய கட்சி தலைவர்கள் சிலருக்கு மந்திரி பதவி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மந்திரிசபையில் இருப்பவர்களில் சிலரை நீக்குவதும், புதிதாக மந்திரிகளை நியமனம் செய்வதும் முதல்-மந்திரியின் அதிகாரம். அதுபற்றி நான் எந்த கருத்தையும் கூற முடியாது.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
Tags:    

Similar News