செய்திகள்
யானை

காரமடை அருகே இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானை- கிராம மக்கள் அச்சம்

Published On 2021-06-06 11:26 GMT   |   Update On 2021-06-06 11:26 GMT
வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளிவராத வகையில் வனப் பகுதியை சுற்றியும் 10அடி அளவுக்கு அகழிகள் வெட்டி காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களில் நுழைவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரமடை:

காரமடை அருகே தோலம்பாளையம் அருகே உள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை தோலம்பாளையம், பட்டிசாலை, காலனி புதூர், சீங்குலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் உள்ள இரவு நேரங்களில் உலா வருகிறது.

அந்த ஒற்றை காட்டு யானை தோலம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நுழைந்து மா மற்றும் தென்னை மரங்களில் அவ்வப்போது பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே அந்த காட்டு யானையை அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளிவராத வகையில் வனப் பகுதியை சுற்றியும் 10அடி அளவுக்கு அகழிகள் வெட்டி காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களில் நுழைவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News