உலகம்
அமெரிக்காவில் பயணத்தின்போது முககவசம் அணிய வேண்டும்

அமெரிக்காவில் பயணத்தின்போது முககவசம் அணிய வேண்டும்: நோய் கட்டுப்பாடு அமைப்பு பரிந்துரை

Published On 2022-05-06 02:04 GMT   |   Update On 2022-05-06 02:04 GMT
பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிதல் வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது.
வாஷிங்டன் :

அமெரிக்காவில் விமானங்கள், பஸ்கள், ரெயில்கள், இன்ன பிற போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை கோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த நிலையிலும், இது போன்ற பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிதல் வேண்டும் என்று அரசு அமைப்பான சி.டி.சி. என்னும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து அந்த மையத்தின் இயக்குனர் ரோச்செல் வாலன்ஸ்கி விடுத்துள்ள அறிக்கையில், “நாம் நம்மை கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு பல கருவிகளை கொண்டுள்ளோம். உயர்தர முககவசகங்கள், சுவாசக்கருவிகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்” என கூறி உள்ளார்.

2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் முககவசங்களை சரியான படிக்கு அணிந்து கொண்டு பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்க வேண்டும் என்பது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் முக்கிய பரிந்துரை ஆகும்.
Tags:    

Similar News