தொழில்நுட்பச் செய்திகள்
இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்- வீடியோ பார்ப்பவர்களுக்கு இனி இந்த கவலை இல்லை..

Published On 2022-03-03 05:38 GMT   |   Update On 2022-03-03 05:38 GMT
டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இணையவாசிகளால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது.

ஆரம்பத்தில் புகைப்படங்களை பகிரும் சமூக வலைதளமாக இருந்த இன்ஸ்டாகிராம் இன்று வீடியோக்கள், ரீல் வீடியோக்கள் உள்ளிட்ட பல அம்சங்களை வழங்கி வருகிறது.

இன்று உலகம் முழுவதும் இணையத்தில் அதிகம் வீடியோக்கள் தான் பார்க்கப்படுகின்றன. இதனால் பயனர்கள் வீடியோ காணும் அனுபவத்தை மேம்படுத்துவதில் இன்ஸ்டாகிராம் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் அதில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தற்போது ஆட்டோ ஜெனரேட்டட் கேப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை அப்லோட் செய்பவர்கள் கேப்ஷனை (சப் டைட்டில்) தனியாக சேர்க்க வேண்டும். ஆனால் இனி வீடியோவில் பேசப்படும் வார்த்தைகள் தானாக மொழிபெயர்க்கப்பட்டு கேப்ஷனில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்துவதற்கு பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலிக்குள் Advanced Settings > Accessibility > Show Captions சென்று செட்டிங்கை மாற்றிகொள்ள வேண்டும்.



செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஆட்டோ கேப்ஷன் அம்சத்தில் தற்போது 17 மொழிகள் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, ரஷ்யன், ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சத்தில் தமிழ் மொழி இன்னும் இடம்பெறவில்லை.

டிக்டாக் அடைந்த வளர்ச்சி மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பின்னடைவை சந்திக்க வைத்தது. டிக்டாக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆட்டோமேட்டட் கேப்ஷனை கொண்டு வந்தது. இதையடுத்து டிக்டாக் பயனர்களை தன்பக்கம் இழுப்பதற்காக இன்ஸ்டாகிராமும் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News