செய்திகள்
பிசிசிஐ

ஐபிஎல் போட்டிக்கு இன்னும் நாட்கள் உள்ளன: பயப்பட தேவையில்லை என்கிறது பிசிசிஐ

Published On 2020-03-09 13:31 GMT   |   Update On 2020-03-09 13:31 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளிப் போகலாம் என்று மகாராஷ்டிரா மாநில மந்திரி கூறிய நிலையில், நாட்கள் உள்ளன என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியபட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.

இந்தியாவில் 40-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிப் போகலாம் என மகாராஷ்டிர மாநில மந்திரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதுபோன்ற முடிவுகளை எடுக்கவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ சார்பில் கூறப்பட்டதாக வந்த செய்தியில் ‘‘நாங்கள் சூழ்நிலையை நன்றாக கவனித்து வருகிறோம். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுப்போம்.

எல்லா விஷயங்களும் எங்களுடைய மனதில் உள்ளது. தற்போது வரை ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை. தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. பிசிசிஐ கூடுதல் மருத்துவக்குழுவை மைதானத்தி அனுப்பும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News