செய்திகள்
கோப்புப்படம்.

தடுப்பூசி செலுத்தினால் ஆர்டர்- வெளிநாட்டு வர்த்தகர்கள் முடிவு

Published On 2021-07-23 13:27 GMT   |   Update On 2021-07-23 13:27 GMT
இந்த ஆண்டு மே, ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு பனியன் உள்ளிட்ட ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்கள்  கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. 

இருப்பினும் குறித்த நேரத் தில் ஆர்டர்களை முடித்து கொடுப்பதால் வெளி நாட்டு வர்த்தகத்தை  தொடர்ந்து தக்க வைத்து கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு  மே, ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கு காரண மாக  ஆடை உற்பத்தி கடுமையாக  பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வையடுத்து ஆடை உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வெளி மாநில தொழிலாளர்களும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பணிக்கு திரும்பி விட்டனர். வெளிநாட்டு ஆர்டர்களும் குவிந்து வருகின்றன. 

ஏற்கனவே உள்ள ஆர்டர்கள் முடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களுக்கும் செலுத்துவதற்கான ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

இதனிடையே தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுப்பதில் வெளிநாட்டு வர்த்தகர்கள் முன்வருகின்றனர். அதன் படி ஆர்டர்கள் கொடுக்கும் போதே  , தொழிலாளர்களின் எண்ணிக்கை விவரம், தடுப்பூசி  செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங் களை கேட்டு அதன்பின்னரே திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு வெளி நாட்டு வர்த்தகர்கள் ஆர்டர்கள் கொடுக்கிறார்கள். இதனால் அனைத்து நிறு வனங்களும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.
Tags:    

Similar News