விளையாட்டு
எதிரணி வீரரை தடுக்கும் தமிழ் தலைவாஸ் அணியினர்

புரோ கபடி லீக் - தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் இடையிலான போட்டி டிரா

Published On 2022-01-06 18:06 GMT   |   Update On 2022-01-06 18:06 GMT
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பெங்களூரு புல்ஸ் அணி 5 வெற்றி, 1 தோல்வி, 1 டையுடன் 28 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு:

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பாட்னா அணி 18-12 என முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து, இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி சுதாரித்துக் கொண்டு புள்ளிகளை சேர்த்தது. 

இறுதியில், தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் இடையிலான ஆட்டம் 30- 30 என்ற புள்ளிக்கணக்கில் டிராவில் முடிந்தது.

இதன்மூலம் தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என 22 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. 

இதில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு புல்ஸ் அணி 38 - 31 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது பெங்களூர் அணி பெறும் 5வது வெற்றி ஆகும். 
Tags:    

Similar News