செய்திகள்
அதிமுக

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

Published On 2021-09-08 06:11 GMT   |   Update On 2021-09-08 06:59 GMT
சட்டசபையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமியை முழுமையாக பேச அனுமதி கொடுக்காததால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எழுந்து ஒரு பிரச்சனை பற்றி பேச முற்பட்டார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், நீங்கள் திடீரென இப்படி பேசினால் அமைச்சரால் பதில் கொடுக்க இயலாது. நீங்கள் நாளை பேசலாம். அனுமதி தருகிறேன் என்றார்.

ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து பேச முற்பட்டார். அப்போது அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து விளக்கம் அளித்தார்.

ஆனாலும் கே.பி.முனுசாமி தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை புகழ்ந்து பேசி தனது கருத்தை பதிய வைக்க முற்பட்டார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு இப்படி பேசுவதை மானிய கோரிக்கையில் தான் பேச வேண்டும். என்ன முக்கியமான விஷயம் உள்ளதோ அதை மட்டும் சொல்லுங்கள் என்றார்.



அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமியை முழுவதும் பேச விடுங்கள். பாதியிலேயே பேச்சை நிறுத்தச் சொன்னால் எப்படி என்றார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும், சபாநாயகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கே.பி.முனுசாமிக்கு தொடர்ந்து பேச அனுமதி கொடுக்காததால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News