செய்திகள்
நாகர்கோவிலில் ஒரு ரேஷன் கடையில் மளிகை பொருட்கள் தொகுப்பு இறக்கி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு அனுப்பி வைப்பு - நாளை முதல் வழங்கப்படுகிறது

Published On 2021-06-14 16:01 GMT   |   Update On 2021-06-14 16:01 GMT
ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது. நாளை முதல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:

கொரோனா நிவாரண உதவியாக 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் 2-ம் தவணை ரூ.2 ஆயிரம் ஆகியவை ரேஷன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 551 ஆயிரத்து 279 ரேஷன் கார்டுகள் பயன்பெற உள்ளன. மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் கடந்த 11-ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதற்கிடையே சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று வரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொப்புகள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன.

அவை அனைத்தும் நாகர்கோவில் கோணம், காப்புக்காடு, ஆரல்வாய்மொழி உள்பட 6 இடங்களில் உள்ள அரசு குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புகள் அனைத்தும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நேற்று முதல் தீவிரமாக நடந்து வருகின்றன.

Tags:    

Similar News