செய்திகள்
சோனியாவுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்கள்

நீட்,ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பாஜக அல்லாத மாநில முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

Published On 2020-08-26 11:13 GMT   |   Update On 2020-08-26 11:13 GMT
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பா.ஜ.க. ஆளாத முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
புதுடெல்லி:

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி ஆலோசிக்க பா.ஜ.க. ஆளாத முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News