செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தாசில்தார் உள்பட 317 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-04-16 13:31 GMT   |   Update On 2021-04-16 13:31 GMT
சிங்கம்புணரி பகுதியில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிங்கம்புணரி தனியார் விடுதியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி பகுதியில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிங்கம்புணரி தனியார் விடுதியில் இலவச தடுப்பூசி முகாம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் மருத்துவர் முத்துலெட்சுமி மற்றும் அரிமா சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முன்னதாக 45 வயதானவர்களுக்கு முகாமில் டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அவர்களின் ஆதார் கார்டுகளை சரி பார்த்து அவர்கள் இதற்கு முன்பு தடுப்பூசி போட்டு கொண்டார்களா? என்பது குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இச்சிறப்பு முகாமில் 317 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அப்போது சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு பொதுமக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதைதொடர்ந்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மது அருந்துவது மற்றும் உணவுகள் குறித்து தடுப்பூசி போட்டு போன்றவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் தினகரன், மதியரசு, உதவியாளர்கள் எழில்மாறன், முகமது பஷீர் மற்றும் செவிலியர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் முகாமை நடத்தினர்.
Tags:    

Similar News