லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் தடுப்பது எப்படி?

Published On 2019-08-13 05:19 GMT   |   Update On 2019-08-13 05:19 GMT
குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வலிப்பு நோய் என்பது மூளையில் நிகழும் அசாதரணமான மின்னுற்பத்தி தான். மூளையில் உள்ள நியுரான் எனும் நரம்பு செல்கள் மின் உற்பத்தி மூலமே சமிக்ஞைகளை கடத்தும். சில நேரங்களில் ஏற்படும் அதிக அளவிலான மின் உற்பத்தி மூலம் கை கால்கள் வலிப்பு ஏற்படுகிறது. கால், கை வலிப்பு என்பதைத் தான் காக்காவலிப்பு என பேச்சு வழக்கில் மருவி விட்டது. வலிப்பு நோய் வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும். குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய் உண்மையில் பெற்றவர்களை பதற வைக்கும். குழந்தைகளுக்கு வலிப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி உணவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு அளிப்பது.

மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது. ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு வருவதைத் தடுக்கலாம்.

குழந்தைக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வலிப்பு வரும்.

காய்ச்சல் வந்தால் உடனடியாகக் காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுத்து விடவேண்டும்.

காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத் துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பதன் மூலம் உடல் சூடு குறையும்.

காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்கவைப்பது போன்ற முதலுதவிகளை உடனே செய்வது மூலம் வலிப்பு வராமல் தடுக்க முடியும்.

வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்க்கலாம்.

வலிப்புக்கான காரணம் அறிந்து, அளிக்கப்படும் தொடர் சிகிச்சையின் மூலம் வலிப்பு நோய் குணமாகும்.
Tags:    

Similar News