செய்திகள்
கோப்புபடம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2021-08-07 08:45 GMT   |   Update On 2021-08-07 09:28 GMT
தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குப் பிறகு சிறந்த பாதுகாப்பை அளிப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். இந்த மருந்தை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 

மூன்றாம் கட்ட பரிசோதனையில் கடுமையான நோயை தடுப்பதில் 85 சதவீதம் செயல்திறனை காட்டியதாகவும், தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்குப் பிறகு சிறந்த பாதுகாப்பை அளிப்பதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு. 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், தற்போது 5வதாக ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

Tags:    

Similar News