உள்ளூர் செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னையில் அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்

Published On 2022-01-29 06:52 GMT   |   Update On 2022-01-29 07:50 GMT
அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

தமிழகத்தில் பிப்ரவரி 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதையொட்டி சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் அரசியல் கட்சி விளம்பரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்ட 3193 விளம்பரங்கள் ஒரே நாளில் அகற்றப்பட்டன.

அதேபோல் தனியார் இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1089 அரசியல் கட்சி விளம்பரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

பஸ் நிலையங்களில் இருந்த தலைவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை அகற்றும் பணிகளும், தலைவர்களின் புகைப்படங்களை மறைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை - முகமது சமி கருத்து

Tags:    

Similar News