ஆன்மிகம்
சிவன்

திருப்பரங்குன்றம் அருகே ஆதி சிவன் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2020-08-25 05:05 GMT   |   Update On 2020-08-25 05:05 GMT
திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேலக்குயில்குடியில் பிரசித்தி பெற்ற ஆதிசிவன் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேலக்குயில்குடியில் பிரசித்தி பெற்ற ஆதிசிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காவல் தெய்வங்களாக கருப்பசுவாமி, மாயாண்டி சுவாமி, முத்துக்கருப்பசுவாமி, பேச்சியம்மன், கருப்பாயி அம்மன், அக்கினிவீரன், சங்கிலி கருப்பு, சோனைகருப்பு உள்பட 21 தெய்வங்கள் அமைந்துள்ளது.

இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி கோவிலுக்குள் சுற்றுச்சுவர் மற்றும் தரைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நேற்று கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News