ஆன்மிகம்
வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நிறைவு

வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா நிறைவு

Published On 2021-04-19 04:31 GMT   |   Update On 2021-04-19 04:31 GMT
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெற்று வந்தது
புதுக்கடை அருகே வேங்கோடு புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழா நாட்களில் திருப்பலி, மறையுரை, சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் தலைமையில் பாதுகாவலர் திருவிழா திருப்பலி நடந்தது.

நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர் ராஜ் மறையுரை ஆற்றினார். முன்னாள் பங்குதந்தை சந்திரசேகர் வாழ்த்தி பேசினார். தொடர்ந்து 11 மணிக்கு அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நற்கருணை ஆசீர், கொடி இறக்கம் ஆகியவை நடந்தது. இறுதியில் பங்குதந்தை ஆன்டனி கோமஸ் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
Tags:    

Similar News