தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ ஸ்மார்ட்போன்

மெல்லிய வடிவமைப்பில் உருவாகும் ஒப்போ எப்21 சீரிஸ்

Published On 2021-12-04 04:13 GMT   |   Update On 2021-12-04 04:13 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்21 சீரிஸ் இந்தியாவில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

ஒப்போ எப்21 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய எப்21 சீரிசில் ஒப்போ எப்21, ஒப்போ எப்21 ப்ரோ மற்றும் ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் மற்றும் ஒப்போ எப்21 மாடல்கள் இந்தியாவில் மார்ச் 17 முதல் மார்ச் 21 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம். இதில் ஒப்போ எப்21 ப்ரோ பிளஸ் மாடல் ஒரு வாரம் முன்னதாகவே விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.



புதிய ஒப்போ எப்21 சீரிஸ் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ எப்19 மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News