ஆன்மிகம்
பாலசமுத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

பாலசமுத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

Published On 2021-08-16 04:32 GMT   |   Update On 2021-08-16 04:32 GMT
இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளின்படி பாலசமுத்திரம் பகவதிஅம்மன் கோவில் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் மடாலயத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.
தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்திநாயனார் குரு பூஜை விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி, 91-வது ஆண்டாக இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளின்படி பாலசமுத்திரம் பகவதிஅம்மன் கோவில் அருகில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் மடாலயத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது.

விழாவானது, மகேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் தொட்டியம் திருவாசகமாமணி புலவர் சுப்பிரமணியன் குழுவில் உள்ள சிவனடியார்கள் தேவார பாடல்களை இசையுடன் பாடினர். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுந்தரமூர்த்தி நாயனாரின் திரு உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலசமுத்திரம் பரமசிவம்பிள்ளை, சதாசிவம்பிள்ளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News