லைஃப்ஸ்டைல்
அன்னாசிப்பழத் தயிர் பச்சடி

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி

Published On 2021-01-15 05:17 GMT   |   Update On 2021-01-15 05:17 GMT
தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:

அன்னாசிப் பழம் - 1 கப் 
தயிர் - 3/4 கப் 
பச்சை மிளகாய் - 2 
தேங்காய் துருவல் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
கடுகு- 2 ஸ்பூன் 
எண்ணெய் -2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - தேவையான அளவு 
வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன். 

செய்முறை:

அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு,வெந்தயம் சேர்த்து தாளித்த பிறகு நறுக்கிய அன்னாசி பழம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், தேங்காய்த்துருவல் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து தேவைபட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கடைசியில் தயிர் சேர்த்து இறக்கி விட வேண்டும். 

இதனை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டாலே சுவை அள்ளும்.. 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News