செய்திகள்
அமைச்சர் கேபி அன்பழகன்

அமித் ஷாவுடன் அமைச்சர் கேபி அன்பழகன் சந்திப்பு

Published On 2020-11-22 04:02 GMT   |   Update On 2020-11-22 04:02 GMT
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
சென்னை:

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த அரசு விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உள்துறை மந்திரி அமித் ஷா தான் தங்கியிருக்கும் தனியார் ஓட்டலுக்கு சென்றார். அமித்ஷா ஓட்டலுக்கு சென்ற சில நிமிடங்களில் அதே ஓட்டலுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்றனர். அவர்களுடன் தேர்தல் தொகுதி பங்கீடு, தேர்தல் வியூகம் உள்பட முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக பாஜக நிர்வாகிகளை அமித் ஷா சந்தித்தார், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அளவிலான கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

இன்று டெல்லி புறப்படும் அமித் ஷாவை வழியனுப்பவதற்காக அமைச்சர் கேபி அன்பழகன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News