ஆட்டோமொபைல்
கார் கோப்புப்படம்

கார் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

Published On 2021-10-13 10:37 GMT   |   Update On 2021-10-13 10:37 GMT
புதிதாக கார் வாங்குவோர், முன்கூட்டியே கவனிக்க வேண்டியவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


ஆடம்பர பட்டியலில் இருந்து அத்தியாவசிய பட்டியலுக்கு கார்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் கார் வாங்குவது ஒவ்வொருவரின் கனவாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி அல்ல. வீடுகள் தோறும் கார்கள் நிற்கும் காட்சியை பார்க்க முடிகிறது. 

அதேநேரத்தில் கார் வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியவை என்பதால் கார் வாங்கும் முன் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். நீண்ட காலம் பயன்படுத்த வேண்டும் எனில், கார் உதிரிபாகங்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.



அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் மாடல்கள், ஏராளமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கார் மாடல்களுக்கு உதிரிபாகங்கள் எளிதில் கிடைத்துவிடும். அதிகமாக விற்பனையாகும் கார்களை கணக்கில் கொண்டே உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

‘நான் தான் ஊரிலேயே  இந்த காரைப் பயன்படுத்துகிறேன்' என்று அறிமுகம் இல்லாத காரை பயன்படுத்தக் கூடாது. இதுபோன்ற மாடல்களில் பழுது ஏற்பட்டாலோ, தேய்மானம் அடைந்தாலோ அதன் உதிரி பாகங்களை மாற்றும் நிலை வந்தால் அவை கிடைப்பது கடினம். பராமரிப்பு செலவும் அதிகமாகும்.
Tags:    

Similar News