செய்திகள்
உடைப்பு ஏற்பட்டதை விவசாயிகள் சரி செய்த காட்சி

சுரண்டை அருகே குளக்கரையில் திடீர் உடைப்பு - விவசாயிகள் சரிசெய்தனர்

Published On 2021-01-10 11:08 GMT   |   Update On 2021-01-10 11:08 GMT
சுரண்டை அருகே குளக்கரையில் தீடீரேன உடைப்பு ஏற்பட்டதை மணல் மூட்டைகளை வைத்து விவசாயிகள் அடைத்தனர்.
சுரண்டை:

சுரண்டை அருகே குலையநேரி கிராமத்திற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சின்ன ரெட்டைகுளம். பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இருந்து வரும் இந்தக்குளம் அண்மையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக கடந்த வாரம் நிரம்பியது. இதனை வீரகேரளம்புதூர் தாசில்தார் முருகு செல்வி, வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்து வந்தனர்.

இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மறுகாலின் மேற்புறத்தில் அதனை ஒட்டி அமைந்துள்ள கரையின் ஒரு பகுதியின் மண் சரிந்து உடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மணல் சரியாமல் இருக்க மணல் மூட்டைகளை வைத்து விவசாயிகள் அடைத்தனர். இந்த பணியில் குளத்தின் பாசன பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News