உள்ளூர் செய்திகள்
தக்காளி

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.70 ஆக குறைந்தது

Published On 2021-12-29 05:25 GMT   |   Update On 2021-12-29 05:25 GMT
கத்தரிக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலையும் இன்று வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

போரூர்:

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கடந்த வாரம் வரை தினசரி 60 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வந்தது.

இதையடுத்து மழை வெள்ள பாதிப்புக்கு பின்னர் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கும் சில்லரை கடைகளில் கிலோ ரூ.50-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து திடீரென மீண்டும் பாதியாக குறைந்து விலை அதிகரித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து 50 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது.

இதையடுத்து மொத்த விற்பனையில் இன்று ஒரு கிலோ முதல் ரக தக்காளி ரூ.55-க்கும் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 வரையிலும் விற்கப்படுகிறது.

இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த கத்தரிக்காய், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலையும் இன்று வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்று மொத்த விற்பனை கடைகளில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.30-க்கும் உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.30-க் கும், அவரைக்காய் கிலோ ரூ.60-க்கும், வெண்டைககாய் கிலோ ரூ.70-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.130-க்கும், குடை மிளகாய் கிலோ ரூ.60-க்கும், கொத்தவரங்காய் கிலோ ரூ.50-க்கும், புடலங்காய் கிலோ ரூ.25-க்கும், சோளம் கிலோ ரூ.18-க்கும், வெள் ளரிக்காய் கிலோ ரூ.15-க்கும் இஞ்சி கிலோ ரூ.18-க்கும், பச்சை மிளகாய் கிலோ ரூ.45-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News