செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் 2 மணி நேரம் விமானங்கள் பறக்க தடை

Published On 2020-01-13 07:20 GMT   |   Update On 2020-01-13 07:20 GMT
குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் காலை 10.35 மணி முதல் 12.15 மணி வரை சுமார் 2 மணி நேரத்திற்கு விமானங்கள் பறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் வருகிற 26-ந்தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி கண்கவர் அணிவகுப்புகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று பலத்த குளிரையும் மீறி ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் ஒத்திகை நடக்கும் நாட்களிலும், குடியரசு தினத்தன்றும் டெல்லியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 10.35 மணி முதல் 12.15 மணி வரை சுமார் 2 மணி நேரத்திற்கு விமானங்கள் பறக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 18, 20, 21, 22, 23, 24, மற்றும் 26-ந்தேதிகளில் மொத்தம் 7 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களும் விமான சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

26-ந்தேதி டெல்லியில் குடியரசு தின விழா காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். சுமார் 3 மணி நேரம் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கொடி ஏற்றிய பிறகு அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்லும். ஜனாதிபதி மாளிகை அருகே நடைபெறும் இந்த விழாவுக்காக இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News