ஆன்மிகம்
படவேடு ரேணுகாம்பாள் கோவில்

படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்பு வழிபடும் பக்தர்களுக்கு தகர கொட்டகை அமைத்துத்தர கோரிக்கை

Published On 2021-06-18 05:48 GMT   |   Update On 2021-06-18 05:48 GMT
படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தினமும் ராஜகோபுரம் முன்பு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த ஏ.கே.படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் தினமும் ராஜகோபுரம் முன்பு தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும், தீபாராதனை காண்பித்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் கோவிலின் ராஜகோபுரம் முன்பு தகரக்கொட்டகை அமைத்துத் தர வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News