செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-10-06 12:13 GMT   |   Update On 2019-10-06 12:13 GMT
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி:

அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், தமிழகத்தில் சிறப்பான சிகிச்சையால் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை. மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை. காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைவு. அரசு மருத்துவமனைகளில் எந்த நேரத்திலும், யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News