செய்திகள்
கோப்புபடம்

கூடுதலாக சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் - தூய்மை பணியாளர்கள் கோரிக்கை

Published On 2021-09-24 05:44 GMT   |   Update On 2021-09-24 05:44 GMT
கொரோனா கால சிறப்பு ஊதியம், நிவாரண உதவி, ஒப்பந்த ஊழியருக்கு உரிய சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் லயன்ஸ் கிளப் அரங்கில் விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலர்களுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

விழுதுகள் அமைப்பு இயக்குனர் தங்கவேலு தலைமை வகித்து, தூய்மை பணியாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து பேசினார். நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், தூய்மை பணியாளர்களுடன், சுகாதார வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினார்.

அப்போது   தூய்மை பணியாளர் தரப்பில் கூறியதாவது:

மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். கொரோனா கால சிறப்பு ஊதியம், நிவாரண உதவி, ஒப்பந்த ஊழியருக்கு உரிய சம்பளம் உள்ளிட்டவை வழங்க வேண்டும் . 

தூய்மை பணியாளர் குடும்ப குழந்தைகள் கல்வி பயிலும் வகையில் விழுதுகள் அமைப்பு செயல்படுத்தும் தற்போதுள்ள 10 வள மையங்களை மேலும் அதிகரிக்க வேண்டும். வடமாநில தொழிலாளர்கள் தங்கள் தாய்மொழியை கற்பிக்கும் வகையில் வள மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
Tags:    

Similar News