செய்திகள்
மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி - நடிகை கங்கனா சந்திப்பு

மகாராஷ்டிர ஆளுநரை சந்தித்த கங்கனா - நீதிகிடைக்கும் என நம்புகிறேன் என்றும் பேச்சு

Published On 2020-09-13 12:55 GMT   |   Update On 2020-09-13 12:55 GMT
சர்ச்சை கருத்து தெரிவித்து பிரபலமான நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்தார்.
மும்பை: 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். மேலும், அவர் மகாராஷ்டிர அரசு மீதும் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நடிகை கங்கனா ரணாவத்தின் மும்பை அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர். 

மேலும், கங்கனா மகாராஷ்டிரா மாநிலம் வர கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு 
வழங்கியது.

இந்த ’ஒய் பிளஸ்’ பாதுகாப்பு படைக்கான செலவை மாநில அரசு ஏற்குமா? அல்லது கங்கனா ரணாவத் ஏற்பாரா? என்ற தகவல் வழங்கப்படவில்லை. ஆனால், எதிர்ப்புக்கு மந்தியில் சிறப்பு பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கங்கனா ரணாவத் மகாராஷ்டிரா மாநிலம் வந்தடைந்தார். 

மகாராஷ்டிராவில் இருந்து கொண்டே அவர் முதல்மந்திரி உத்தவ் அரசு மீதும் சிவசேனா கட்சி மீதும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை கங்கனா மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தனது அலுவலக கட்டிடத்தின் ஒரு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டது குறித்தும் மாநில அரசுடன் நிலவி வரும் மோதல் குறித்தும் கங்கனா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் எடுத்துரைத்தார்.

ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா,’ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து எனக்கு வழங்கப்பட்ட அநீதி குறித்து கூறினேன். எனக்கு நீதிகிடைக்கும் என்று நம்புகிறேன். அப்போதுதான் அனைத்து குடிமக்களும், இளம் பெண்களுக்கும் இந்த சட்டதிட்டம்  நடைமுறைகள் மீதான நம்பிக்கை அப்படியே இருக்கும். நான் சொல்வதை ஒரு மகள் சொல்வதை கேட்பது போல ஆளுநர் கேட்டறிந்தார்’ என்றார்.

Tags:    

Similar News