ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ

Published On 2019-10-11 09:26 GMT   |   Update On 2019-10-11 09:26 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ கார் இந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ காரை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் விலை ரூ. 3.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எஸ் பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. சமீபத்திய விற்பனை விவரங்களில் மாருதி சுசுகி இதுவரை 5006 யூனிட்கள் வினியோகம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ விற்பனை இந்திய சந்தையில் 5000 யூனிட்களை கடந்துள்ளது. இது ரெனால்ட் க்விட் மாடலை விட அதிகம் ஆகும்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் க்விட் இதே காலக்கட்டத்தில் சுமார் 2995 யூனிட்கள் முன்பதிவுகளை கடந்துள்ளது. புதிய ரெனால்ட் க்விட் கார் காஸ்மெடிக் அளவில் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இத்துடன் இதில் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



மாருதி எஸ் பிரெஸ்ஸோ அந்நிறுவனத்தின் புதிய மாடல் ஆகும். மாருதி எஸ் பிரெஸ்ஸோ ஆல்டோ கே10 மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி எஸ் பிரெஸ்ஸோ தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் மாடல்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

எஸ் பிரெஸ்ஸோ கார் ஆல்டோ மற்றும் வேகன் ஆர் மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ரெனால்ட் க்விட் மாடல் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் விற்பனை 45% சரிந்துள்ளது.
Tags:    

Similar News