செய்திகள்
பர்பிள் கேப் அட்டவணை

பர்பிள் கேப்: ரபடாவை விரட்டும் பும்ரா, முகமது ஷமி

Published On 2020-10-29 14:50 GMT   |   Update On 2020-10-29 14:50 GMT
தொடக்கத்தில் இருந்தே அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரபடாவிற்கு, தற்போது முகமது ஷமி, பும்ரா கடும் போட்டியாக திகழ்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவருக்கு ஆரஞ்ச் தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

ஐபிஎல் தொடரில் தொடங்கியதில் இருந்தே ரன்குவிப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல் முதல் இடத்தில் இருந்து வருகிறார். அதேபோல் பந்து வீச்சில் டெல்லி அணி வீரர் ரபடா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

முதல் போட்டியில் இருந்து 11-வது போட்டியை வரை அவர் விக்கெட் எடுக்காமல் இருந்தது கிடையாது. 12-வது போட்டியில் ஐதராபாத் அணிக்கெதிராக ரபடா விக்கெட்  வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் பும்ரா, முகமது ஷமி அதிக அளவில் விக்கெட் வீழ்த்தி அவரை நெருங்கிவிட்டனர்.

ரபடா 23 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா ஆர்சிபி-க்கு எதிராக 12-வது போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 20  விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முகமது ஷமியும் 20 விக்கெட் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

ஆர்சிபி வீரர் சாஹல் 18 விக்கெட்டும், ரஷித் கான், ஆர்சர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 17 விக்கெட் வீழ்த்தி முறையே 5 முதல் 7 இடங்களையும் பிடித்துள்ளனர்.

டெல்லி அணியின் நோர்ட்ஜோ 15 விக்கெட்டும், ராகுல் சாஹர் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். வருண் சக்ரவர்த்தி 13 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News