சமையல்
திப்பிலி ரசம்

தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் திப்பிலி ரசம்

Published On 2022-02-14 05:27 GMT   |   Update On 2022-02-14 05:27 GMT
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக் குணமாக்கும். நோய்களைக் குணப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
தேவையான பொருட்கள் :

அரிசி திப்பிலி - 10,
கண்டதிப்பிலி - சிறிதளவு,
மிளகு - 10,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சீரகம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை கலந்து தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

குறிப்பு: பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட... மிகவும் நன்றாக இருக்கும்.
Tags:    

Similar News