செய்திகள்
வாழைத்தார்

சின்னமனூரில் இருந்து கேரளாவுக்கு ஏற்றுமதியாகும் வாழைத்தார்

Published On 2019-11-11 10:16 GMT   |   Update On 2019-11-11 10:16 GMT
சின்னமனூர் பகுதியில் வாழை விளைச்சல் அமோகமாக உள்ளதால் கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சின்னமனூர்:

தேனி மாவட்டம் சின்னமனூர், மார்க்கையன் கோட்டை, குச்சனூர், அம்மாபட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாளிபூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை மற்றும் பச்சை வாழைப்பழங்கள் என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பருவமழை கைகொடுத்ததால் வாழை விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்த வாழைகளை சின்னமனூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

கேரள பகுதி மக்கள் வாழைக்காய்களை விரும்பி சாப்பிடுவதால் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மார்க்கெட்டுக்கு போக குமுளி, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விவசாயிகள் வாழைக்காய்களை அனுப்பி வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் விரும்பி வாங்குவதால் வாழைப்பழம் மற்றும் இலைகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News