செய்திகள்
மைதானத்தை வியந்து பார்க்கும் அக்சர் படேல், ஹர்த்திக் பாண்ட்யா

சுற்றிப்பார்க்கவே ஒரு மணிநேரம் ஆனது - மொதேரா மைதானம் குறித்து இந்தியா அணி வீரர்களின் கருத்து

Published On 2021-02-21 07:56 GMT   |   Update On 2021-02-21 08:04 GMT
3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொதேரா சர்தார் படேல் மைதானம் குறித்து இந்திய அணி வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அகமதாபாத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

முதல் டெஸ்டில் இங்கி லாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

3-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல்-இரவாக நடக்கிறது. 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தான் அமரும் வகையில் இருக்கைகள் உள்ளது. முதலில் இங்கு 49 ஆயிரம் பேர் அமர முடியும். மறு சீரமைப்புக்கு பிறகு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆனது. மெல்போர்ன் ஸ்டேடியத்தில் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி உள்ளது. அதை அகமதாபாத் ஸ்டே டியம் முறியடித்தது.

சுமார் 63 ஏக்கர் பரப்பள வில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் அதி நவீன வசதிகள் உள்ளன. மைதானத்தில் வீரர்களுக் காக 4 டிரெஸ்சிங் ரூம்கள் உள்ளன. மேலும் 11 சென்டர் பிட்ச்களும் உள்ளன.

இந்த மைதானத்தில் தான் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரப்பின் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே போட்டியை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன்படி 3-வது டெஸ்ட் போட்டிக்கு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அங்கு 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுவிட்டன.

3-வது டெஸ்ட் போட்டி யில் விளையாடுவதற்காக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே சென்னையில் இருந்து அகமதாபாத் சென்று விட்டனர். அவர்கள் மொதேரா மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தை பார்த்து இரு அணி வீரர்களும் பிரமிப்பு அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் டுவிட்டரில், ‘இந்த புதிய ஸ்டேடியத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடம் அபாரமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கூறும்போது, ‘‘உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இருப்பது பெருமையாக இருக்கிறது. இங்கு எல்லாமே அற்புதமாக இருக்கிறது. மைதானத்தை சுற்றிப்பார்க்கவே எங்களுக்கு ஒரு மணிநேரம் ஆனது’ என்றார்.

புஜாரா கூறும்போது, ‘சர்தார் படேல் மைதானம் பெரியது. வித்தியாசமான உணர்வை தருகிறது. பகல்- இரவு டெஸ்டில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்’ என்றார்.

சுப்மன்கில்:- இந்தியாவில் தான் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உள்ளது. இதில் எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

மயங்க் அகர்வால்:- ஸ்டேடியத்தில் நுழைந்து கேலரிகளை பார்த்ததுமே வியந்துவிட்டோம். இதற்கு முன்பு இவ்வளவு பெரிய மைதானத்தில் ஆடியது இல்லை.

இதேபோல இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ், முன்னாள் வீரர் பீட்டர் சன் ஆகியோரும் ஸ்டேடியத்தின் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News