தொழில்நுட்பம்
ஏர்பாட்ஸ் ப்ரோ

புதிய ஏர்பாட்ஸ், மேம்பட்ட மேக்புக் ப்ரோ உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்

Published On 2020-04-20 10:45 GMT   |   Update On 2020-04-20 10:45 GMT
ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஏர்பாட்ஸ், மேம்பட்ட மேக்புக் ப்ரோ, ஐபேட் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஆப்பிள் நிறுவனத்தின் புதய சாதனங்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ், புதிய ஐபேட் ஏர், 12 இன்ச் மேக்புக் மற்றும் ஆப்பிள் கேம் கண்ட்ரோலர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலை மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நடத்த இருந்த மார்ச் மாத நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.



இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஓவர் இயர் ஹெட்போன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த ஹெட்போன் ஏர்பாட்ஸ் எக்ஸ் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோ மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அன்டர்-ஸ்கிரீன் டச் ஐடி சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மினி எல்இடி டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபேட், சிறிய ஹோம்பாட், ஆப்பிள் கேம் கண்ட்ரோலர், ஐபோன் 12 உள்ளிட்டவற்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. 
Tags:    

Similar News