செய்திகள்
கோப்புபடம்

ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்திய வாலிபர்

Published On 2021-10-11 10:06 GMT   |   Update On 2021-10-11 10:06 GMT
மது வாங்க பணம் கொடுக்காததால் திருவனந்தபுரம் அருகே வாலிபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த 19 கார்களை சேதப்படுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தாம்பனூர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் மற்றும் பொது மக்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இங்கு உள்ள கார் நிறுத்தத்தில் தினமும் கார்களை பார்க்கிங் செய்து விட்டு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ரயில் நிலையத்தில் நிறுத்தி இருந்த கார்களை எடுக்கச் சென்றனர். அப்போது அங்கு நிறுத்தியிருந்த கார்கள் கல்லால் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது.

கண்ணாடிகள் மற்றும் கார்களின் முன் பகுதிகள் சேதம் அடைந்து இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் இதுகுறித்து திருவனந்தபுரம் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தாம்பனூர் ரெயில் நிலையத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் ஆவேசமாக கார்களை சேதப்படுத்தும் காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து காரை சேதப்படுத்திய வாலிபரை தேடி வந்தனர். பின்னர் அவரை திருவனந்தபுரத்தில் கைது செய்தனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ஆப்ரகாம் என்பதும் அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால் மது அருந்த குடும்பத்தினர் பணம் கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் வாக்கு வாதம் செய்து உள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அவர் நேராக தாம்பனூர் ரெயில் நிலையம் சென்று அங்கு பார்கிங் செய்யப்பட்ட குடும்பத்தினர் மற்றும் பிறரின் கார்களை அடித்து நொறுக்கி உள்ளார்.

இதில் 19 கார்கள் சேதமடைந்தன. காரில் வந்த செல்போன் சார்ஜர்கள் உள்ளிட்ட சில பொருட்களும் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News