தொழில்நுட்பம்
சோனி WF-1000XM3

விரைவில் இந்தியா வரும் சோனி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்

Published On 2020-07-26 05:45 GMT   |   Update On 2020-07-25 08:00 GMT
சோனி WF-1000XM3 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


சோனி நிறுவனத்தின் புதிய WF-1000XM3 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

முன்னதாக சோனி WF-1000XM3 இயர்பட்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் பயன்படுத்தாத போது இந்த இயர்பட்ஸ் 32 மணி நேர பேக்கப் வழங்கும்.

இத்துடன் சோனி WF-1000XM3 மாடலில் அமேசான் அலெக்சா, ஆப்பிள் சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. 



இந்தியாவில் சோனி WF-1000XM3 இயர்பட்ஸ் அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் விலை விவரங்களை அமேசான் இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், சர்வதேச சந்தையில் இதன் விலை GBP220 அதாவது இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சோனி WF-1000XM3 மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் ஸ்விட்ச் ஆன் செய்யப்பட்ட நிலையில், ஆறு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். இந்த அம்சம் ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இது 32 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும். இந்த இயர்பட்ஸ் குவிக் அட்டென்ஷன் மோட் மற்றும் ஆம்பியன்ட் சவுண்ட் மோட் வழங்கப்படுகிறது.

அமேசான் பிரைம் டே 2020 நிகழ்வில் பல்வேறு ஆடியோ சாதனங்கள் அறிமுகமாக இருக்கின்றன. இவற்றில் ஒரு மாடலாக சோனி WF-1000XM3 இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் பில்ட் இன் இதய துடிப்பு சென்சார் கொண்ட அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ் மாடலும் அறிமுகமாக உள்ளது.
Tags:    

Similar News