செய்திகள்
சித்தராமையா

கலகலத்தது கர்நாடக மந்திரிசபை - 21 காங்கிரஸ் மந்திரிகள் ராஜினாமா

Published On 2019-07-08 08:24 GMT   |   Update On 2019-07-08 08:24 GMT
கர்நாடகா மாநிலத்தில் 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், முதல்வர்  குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.


இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றிருந்த 21  மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததாக அம்மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று குறிப்பிட்டுள்ளார்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டார். 
Tags:    

Similar News