செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை பதிவிற்கு 17,927 ஏக்கர் இலக்கு

Published On 2021-11-25 06:14 GMT   |   Update On 2021-11-25 06:14 GMT
தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி தாராபுரத்தில் நடந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக நெல் 10 ஆயிரம் எக்டரில் பயிரிடப்படுகிறது. அதில் 17,927 ஏக்கர் வரை விதைப் பண்ணைகளாக பதிவு செய்யப்படுகிறது. மாவட்டத்தின் பிரதான நெல் பருவம் சம்பா பருவமாகும்.

தாராபுரம், உடுமலை பகுதிகளில் 60 தனியார் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விதைச்சுத்திகரிப்பு நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. 

ஆண்டொன்றுக்கு சராசரியாக 65,000 - 70,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் சுத்திகரிப்புபணி மேற்கொள்ளப்பட்டு ஆய்வக பகுப்பாய்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் சான்றுப்பணி முடிக்கப்பெற்று சான்று பெற்ற நெல் விதைகளாக பிற மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது நெல் சம்பா சாகுபடி தாராபுரம், மடத்துக்குளம், காங்கயம் மற்றும் உடுமலை பகுதிகளில் தொடங்கி வரிசை நடவு, உருளை விதைப்பு மூலம் பயிரிடப்பட்டுள்ளது.சில பகுதிகளில் நடவு செய்யப்பட்டு 30 - 50 நாட்கள் பயிராக  தூர்விடும் பருவத்தில் உள்ளது. 

மாவட்டத்தில் நெல் விதைப்பண்ணை பதிவிற்கு 17,927 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி தாராபுரத்தில் நடந்தது. மாவட்ட விதைசான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மாரிமுத்து தலைமையில் நடந்தது.

தாராபுரம்-4 விதைசான்று அலுவலர் தனஜெயந்தி, உடுமலை-1 விதைசான்று அலுவலர் ஷர்மிளாபானு ஆகியோர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், பதிவு செய்யும் போது இணைக்க வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றை பற்றி விளக்கி கூறினர்.
Tags:    

Similar News