செய்திகள்
மழை பெய்ததால் மூடப்பட்ட ஆடுகளம்

மழையால் தாமதம் ஆகும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - முதல் செசன் ஆட்டம் ரத்து

Published On 2021-06-18 09:49 GMT   |   Update On 2021-06-18 09:49 GMT
மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும்.
சவுத்தம்டன்:

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

சவுத்தம்டனில் போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கீடு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. குறிப்பாக முதல் நாளில் மழை கொஞ்சம் அதிகமாகவே பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று போட்டி துவங்குவதற்கு முன்பாகவே மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டி ஷிட்களால் மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டது. 

மழை சிறிது நேரத்தில் விட்டால் டாஸ் சுண்டப்பட்டு போட்டியை தொடங்க போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் டாஸ் சுண்டப்படவில்லை. இன்றைய முதல் செசன் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் மழை மற்றும் மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் விரயமாகும் நேரம் முழுமையாக கணக்கிடப்பட்டு அந்த நேரம் மாற்று நாளான (ரிசர்வ் டே) 6-வது நாளில் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட வைக்கப்படும். அதே சமயம் 5-வது நாளுக்குள் முடிவு கிடைத்து விட்டால், நேரம் கணக்கீடு மற்றும் கூடுதல் நாள் தேவை இருக்காது.
Tags:    

Similar News