ஆன்மிகம்
வடபழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம்

வடபழனி முருகன் கோவிலில் கணபதி ஹோமம்

Published On 2019-09-03 03:27 GMT   |   Update On 2019-09-03 03:27 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகருக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. கோவில் தலைமை குருக்கள் செல்வம் தண்டபாணி தலைமையில் பூசாரிகள் வேத, மந்திரங்கள் ஓதினர்.

வடபழனி முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். மழை பெய்து தன்ணீர் பிரச்சினை தீர வேண்டும். மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இந்த யாகம் நடைபெற்றது.

வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், செயல் அலுவலர் சித்ரா தேவி மற்றும் பக்தர்கள் கணபதி ஹோமத்தில் பங்கேற்றனர்.

விநாயகர் சிலையுடன் பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது. 
Tags:    

Similar News