செய்திகள்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை- கலெக்டர் தகவல்

Published On 2021-01-14 03:35 GMT   |   Update On 2021-01-14 03:35 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை திருவள்ளுவர் தினம், 26-ந்தேதி குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடிவைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை:

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவை நாளை (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம், 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் மற்றும் 28-ந்தேதி (வியாழக்கிழமை) வள்ளலார் நினைவு தினம் ஆகிய 3 நாட்கள் மூடிவைக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் மது கூடத்தில் மதுபான விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News