செய்திகள்
தாமரைக்குளம்

தாமரைக்குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-09-16 09:45 GMT   |   Update On 2020-09-16 09:45 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தாமரைக்குளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலியமங்கலம்:

தஞ்சையை அடுத்த புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ளது தாமரைக்குளம். இந்த குளம் பல ஆண்டுகளாக பயன்பாடற்று அசுத்தமான நீர் சூழ்ந்து கிடந்தது.

இந்தநிலையில் குளத்தை தூர்வாரி தடுப்பு சுவர்கள் அமைத்து, குளத்தை சுற்றிலும் புல்வெளி நடைபாதை, அலங்கார மின் விளக்குகள், பொதுமக்கள் அமர இருக்கைகள் என பல்வேறு அம்சங்களுடன் கூடிய எழில் மிகு குளமாக அமைத்திட அரசு முடிவெடுத்தது. அதற்காக ரூ.72 லட்சத்து 89 ஆயிரம் நிதி ஒதுக்கியது. இந்த பணி ஜூலை 2017-ல் தொடங்கி, 2019-ல் நிறைவு பெற திட்டமிடப்பட்டு, புராதான நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் சீரமைக்கும் பணி நிறைவடையாமல் அப்படியே நிலுவையில் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாமரைக்குளத்தை விரைந்து சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News