தொழில்நுட்பம்
போக்கோ எம்2

விரைவில் இந்தியா வரும் போக்கோ எம்2 புது வேரியண்ட்

Published On 2021-03-27 06:11 GMT   |   Update On 2021-03-27 06:11 GMT
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எம்2 புது வேரியண்ட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது அறிமுகமாக இருக்கும் புது வேரியண்ட் போக்கோ எம்2 ரீலோடட் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புது போக்கோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் எம்ஐயுஐ குறியீடுகளின் ஸ்ட்ரிங் ஒன்றில் இடம்பெற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.



இதை கொண்டு இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த குறியீடு இந்தியாவையும் குறிப்பதால், இது இந்தியாவிலும் அறிமுகம்  செய்யப்படலாம் என தெரிகிறது. போக்கோ எம்2 ரீலோடட் மாடலில் மேம்பட்ட பிராசஸர், கேமராக்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எம்2 மாடலில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி வாட்டர் டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. 

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ எம்2 மாடலில் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News