செய்திகள்
தற்கொலை முயற்சி

களக்காடு அருகே தலைமை ஆசிரியை தற்கொலை முயற்சி

Published On 2021-06-26 10:18 GMT   |   Update On 2021-06-26 10:18 GMT
களக்காடு அருகே தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள பத்மநேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மனைவி லில்லி (40). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று லில்லி வீட்டில் இருந்த கற்பூரத்தை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லில்லி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது லில்லி அதே பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் தலா ரூ.1.5 லட்சம் வீதம் கடன் வாங்கி இருந்ததும், அதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி கொடுத்த பிறகும் அவர்கள் பணம் தரவில்லை என கூறி லில்லியிடம் தகராறும் செய்துள்ளனர்.

சம்பவத்தன்று லில்லிக்கு பணம் கொடுத்தவர்களில் ஒருவரான பார்வதி என்ற பெண் அவரை அவதூறாக பேசி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் மனம் உடைந்த லில்லி தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து பார்வதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News