செய்திகள்
டெங்கு கொசு

டெங்குவை தடுக்கும் வழிமுறைகள்- சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம்

Published On 2021-11-13 02:59 GMT   |   Update On 2021-11-13 02:59 GMT
2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை யூனியன் பிரதேசத்தில் டெங்குவை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கொசு மருந்து அடித்தல் மற்றும் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைளில் முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் சிக்குன்குனியா வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

தேங்காய் மட்டைகளை நிமிர்த்து வைக்காமல் நீர் தேங்காமல் கவிழ்த்து வைப்போம். தேவையுள்ள தண்ணீர் பானையை மூடி வைப்போம். தேவையற்ற பானைகளை மூடிவைப்போம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம். தேவையற்ற பொருட்களை முறையாக அப்புறப்படுத்துவோம்.

தேவையற்ற டயர்களை தவிர்ப்போம். தேவையெனில் ஓட்டைபோட்டு மழைநீர் தேங்காமல் தடுப்போம். தண்ணீர் தொட்டியை கொசு புகாமல் மூடி வைப்போம். 2 நாட்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு ஆஸ்பத்திரியை அணுகவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News