செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு நடைபெற்ற போது எடுத்த படம்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

Published On 2020-01-13 18:17 GMT   |   Update On 2020-01-13 18:17 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 3,004 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி:

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் 969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான எழுத்து தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 947 பேர் விண்ணப்பித்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி, புனித மரியன்னை மகளிர் கல்லூரி, விசாகா மேல்நிலைப்பள்ளி, செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

நேற்று காலையில் தேர்வு தொடங்கி நடந்தது. இதில் 2,503 ஆண்கள், 501 பெண்கள் என மொத்தம் 3,004 பேர் தேர்வு எழுதினர். 943 பேர் தேர்வு எழுதவரவில்லை.

இந்த தேர்வை சிறப்பு அதிகாரியான சென்னை தலைமையிடத்து ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். இன்று (திங்கட்கிழமை) போலீஸ் துறையில் பணியாற்றி வருபவர்களுக்கான எழுத்து தேர்வு நடக் கிறது. இதில் 100 பெண்கள் உள்பட 565 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான தேர்வு மையம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அமைக் கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News