செய்திகள்
வினய் சர்மா

நிர்பயா வழக்கு- குற்றவாளி வினய் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Published On 2020-02-13 06:29 GMT   |   Update On 2020-02-13 09:50 GMT
நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையை ஆய்வு செய்யும்படி குற்றவாளி வினய் சர்மா முன்வைத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
புதுடெல்லி:

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை உருவானது. 

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக  குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 



இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும் போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரர் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டார்.  

கருணை மனுவை நிராகரிப்பது தொடர்பான பரிந்துரையில் ஆளுநர் மற்றும் உள்துறை மந்திரி கையெழுத்திடவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர். இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கருணை மனு நிராகரிப்பு தொடர்பான பரிந்துரையில் ஆளுநரும், உள்துறை மந்திரியும் கையெழுத்திட்டிருப்பதாக கூறினர். 

தொடர்ந்து வாதம் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மனு மீது நாளை தீர்ப்பு வழங்குவதாக கூறினர்.
Tags:    

Similar News