லைஃப்ஸ்டைல்
கோதுமை கேழ்வரகு லட்டு

குழந்தைகளுக்கு சத்தான நொறுக்கு தீனி செய்யலாமா?

Published On 2021-03-09 05:27 GMT   |   Update On 2021-03-09 05:27 GMT
உணவை தவிர நாம் கொடுக்கும் நொறுக்கு தீனிகளிலும் குழந்தைகளுக்கு தேவையான சத்து இருந்தால் மிகவும் நல்லது. அடிக்கடி இவற்றை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு பாக்கெட்டில் அடைத்த திண்பண்டகளின் ஞாபகமே வராது.
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
பீனட் பட்டர் - 50 கிராம்
நாட்டுச்சார்க்கரைத்தூள் - 1 கப்
உடைத்த முந்திரி பருப்பு - 50 கிராம்
நெய் - 250 மிலி
பாதாம் பருப்பு வறுத்து பொடித்தது - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்
கலர் சீரக மிட்டாய் - 50 கிராம்

செய்முறை

வாணலியில் சிறிது நெய்விட்டு சூடானதும் கோதுமை மாவையும், ராகி மாவையும் தனித்தனியே வாசனை வரும் அளவு வறுத்து எடுத்துவைத்து கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வறுத்த மாவுகளை போட்டு அத்துடன் நாட்டுச்சர்க்கரைத்தூள், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் வறுத்து பொடித்த பாதாம் பருப்பை சேர்த்து பிசைய வேண்டும்.

வாணலியில் நெய் ஊற்றி உருகியதும் சற்று ஆறவிட்டு கைபொறுக்கும் சூட்டில் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக சேர்த்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். மாவை அழுத்தமாக உருண்டை பிடிக்க வேண்டும். இல்லையேல் உதிர்ந்து விடும்.

பீனட் பட்டர் சிறிதளவு எடுத்து உருண்டையின் மேல் ஒரு பக்கம் மட்டும் தடவ வேண்டும். அதன் மேல் சீரக மிட்டாய் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

கலர்புல்லான சத்தான உருண்டை ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News